Friday, 8 June 2018

பெரு மூச்சு

நான் யாரிடம் நிவாரனம்
கேட்பது எனக்கு ஏற்பட்ட சேதத்திர்க்கு
பிரகாஷ் சிவகுமார்

Monday, 17 November 2014

இப்படிக்கு .........












என் மனதில் உள்ள பாரங்களை இறக்கி வைக்கின்றேன் நான் யார்?

ஏங்கி தவிக்கும் ஏழை ஒருபக்கம்,
சேத்து செழிக்கும் செல்வந்தர் மறுபக்கம்!

சீறி பாயும் வாகனங்கள்  ஒருபக்கம்,
அங்கே சில்லறைக்கு ஏங்கும் சிறுவர்கள் மறுபக்கம்!

தெருவில் கிடைப்பதை தேடி எடுப்போர் ஒருபக்கம்,
தெகிட்டிபொனதை தெருவில் கொட்டுவோர் மறுபக்கம் !

பிச்சை எடுக்கும் அவலநிலை ஒருபக்கம்,
pizza hutலே அந்திமாலை மறுபக்கம்!

படித்து முடித்து வேலை கிடைப்பது ஒருபக்கம்,
கிடைத்த வேலைக்கு உலை வைப்போர் மறுபக்கம்!

பிழைப்புக்காக கடல் கரையில் நடப்போர் ஒருபக்கம்,
BMI க்காக கடலில் நடப்போர் மறுபக்கம்!

கனவு பலிக்கும் என காத்திருப்போர் ஒருபக்கம்,
பிறர் கனவை கலைக்க காத்திருப்போர் மறுபக்கம்!

கையுட்டு  வாங்கி பிழைப்பு நடத்தும் காவலாளி ஒருபக்கம்,
கையுட்டு கொடுத்து பிழைப்பு நடத்தும் களவானி மறுபக்கம்!

குழந்தைக்கு பால் இல்லை ஒருபக்கம்,
நடிகருக்கு பால் அபிசேகம் மறுபக்கம்!

பெண்கொடுமை வன்கொடுமை ஒருபக்கம்,
பெண்ணுரிமை சுயமரியாதை மறுபக்கம்!


ஜாதிகள் இல்லையடி பாப்பா ஒருபக்கம்,
பள்ளியில் சேர ஜாதி சான்றிதழ் மறுபக்கம்!

கிழிந்த துணியை தைத்து போடுவோர் ஒருபக்கம்,
தைத்த துணியை கிழித்து போடுவோர் மறுபக்கம் !

என்னை விதி என்போர் ஒருபக்கம்,
மதி கொண்டு மாற்ற நினைப்போர் மறுபக்கம்!

                                        இப்படிக்கு,
                                        சமுதாயம்
 

Friday, 6 December 2013

தந்தை








நான் முதல் முதலில்
 பார்த்த கதாநாயகனை பற்றி சிலவரிகள்
மண் மீது நடந்தால் பாதம் நோகும் என்று
 என்னை மார் மீது நடக்க வைத்தவன் நீ!

வறுமை என்னை வாட்டினாலும்
என்னை வாடாமல் காத்தவன் நீ !
நான் நொறுக்கு தீனி சாப்பிட
உன்  உணவை தவீர்தவன் நீ!

சக வயதினர் அரை கால் சட்டை அணியும் போதே
முழு கால் சட்டை அணியவைத்து அழகுபார்தவன் நீ !
என் பொழுது போக்கை
உன் பிழைப்பாய் கொண்டவன் நீ!
 நான் விளையாட குழந்தையாய் மாறியவன் நீ!





வீட்டில் காலை உணவிற்கே கேள்வி குறி  என்றாலும்
என்னை கல்லூரிக்கு அனுப்பியவன் நீ!

என்மீது வாசனை திரவியங்களின் வாசனை பல அடித்தாலும்
உன் வாசனை என்றும் வியர்வைதான்!
இதுவரை திருவிழா பல கண்டாலும்
உன்னை கம்பிரமாக பார்த்தது என் முதல் மாத சம்பளத்தில் தான்!

இதுவரை விழும் போது நான் பயப்படவில்லை
அரணாக உன் அனுபவம் இருக்கும் என்று

எனக்கு ஒரு ஆசை !
அடுத்த பிறவியில் நீ என்மகனாக பிறக்க அல்ல
எந்த பிறவிலும் நான் உன் மகனாக பிறக்க !



Monday, 30 September 2013

மின்சாரம்









இதுவரை சூரியனில்  இருந்து  மின்சாரம்  
எடுப்பதுதான் எனக்கு தெரியும் !
உன்னை பார்த்த பின்புதான் நிலவில் இருந்து கூட  

அதிக அளவு மின்சாரம் எடுக்க முடியும் என்று !

Thursday, 15 August 2013

காதலியின் முகம்





காற்றே !என் மீது என்ன கோபம்
என் நிலவை கார்மேகம் கொண்டு அடிக்கடி
மூடுகிராயே ஆனால் ஒன்று
ஒவ்வொரு முறை விலகும்போதும்
ஒரு பிரம்மாண்டம் தெரிகிறது !!!
 
                                          -சி.பிரகாஷ் 

Wednesday, 14 August 2013

அவளின் முகம்





அடடே நிலவில் கூட மேடு பள்ளம்
இருப்பது எனக்கு இன்றுதான் தெரியும்
உன் முகபருவைதன் கூறினேன் !!!..


ஏண்டி என்ன விட்டுட்டு போன




ஏண்டி என்ன விட்டுட்டு போன!
தியால  நெஞ்ச சுட்டுட்டு போன!

திரியா  நனைச்சு திரிச்சிவிட்ட !
அதில் தீயையும் வச்சு எரியவிட்ட!

அனைகத்தான் நினைக்குற அனையலையே !
உன்ன நினைக்காம இருக்க முடியலையே !

நாத்து நினைத்துதா நா நட்ட !
புயலா வந்து அத புடுங்கிவிடியே !

கத்துனு நினச்சுதான் நான் சுவாசிசேன் !
புகையா நெஞ்சுக்குள்ள சிக்கிகிடியே !

மதில் மேல் இருக்குற பூனையா !
என் மனத எளிதில் உடைச்சிட்ட மண் பனையா! 

மின்சாரம் இல்லன்னு எத்துன மேழுகுவதியா !
வெளிச்சம் வந்ததும் அனைதுடியே !
இதுதான் பொண்ணுங்க புத்தியா !


                                                         சி .பிரகாஷ்