நான் முதல் முதலில்
பார்த்த கதாநாயகனை பற்றி சிலவரிகள்
மண் மீது நடந்தால் பாதம் நோகும் என்று
என்னை மார் மீது நடக்க வைத்தவன் நீ!
வறுமை என்னை வாட்டினாலும்
என்னை வாடாமல் காத்தவன் நீ !
நான் நொறுக்கு தீனி சாப்பிட
உன் உணவை தவீர்தவன் நீ!
சக வயதினர் அரை கால் சட்டை அணியும் போதே
முழு கால் சட்டை அணியவைத்து அழகுபார்தவன் நீ !
என் பொழுது போக்கை
உன் பிழைப்பாய் கொண்டவன் நீ!
நான் விளையாட குழந்தையாய் மாறியவன் நீ!
வீட்டில் காலை உணவிற்கே கேள்வி குறி என்றாலும்
என்னை கல்லூரிக்கு அனுப்பியவன் நீ!
என்மீது வாசனை திரவியங்களின் வாசனை பல அடித்தாலும்
உன் வாசனை என்றும் வியர்வைதான்!
இதுவரை திருவிழா பல கண்டாலும்
உன்னை கம்பிரமாக பார்த்தது என் முதல் மாத சம்பளத்தில் தான்!
இதுவரை விழும் போது நான் பயப்படவில்லை
அரணாக உன் அனுபவம் இருக்கும் என்று
எனக்கு ஒரு ஆசை !
அடுத்த பிறவியில் நீ என்மகனாக பிறக்க அல்ல
எந்த பிறவிலும் நான் உன் மகனாக பிறக்க !
No comments:
Post a Comment