Monday, 17 November 2014

இப்படிக்கு .........












என் மனதில் உள்ள பாரங்களை இறக்கி வைக்கின்றேன் நான் யார்?

ஏங்கி தவிக்கும் ஏழை ஒருபக்கம்,
சேத்து செழிக்கும் செல்வந்தர் மறுபக்கம்!

சீறி பாயும் வாகனங்கள்  ஒருபக்கம்,
அங்கே சில்லறைக்கு ஏங்கும் சிறுவர்கள் மறுபக்கம்!

தெருவில் கிடைப்பதை தேடி எடுப்போர் ஒருபக்கம்,
தெகிட்டிபொனதை தெருவில் கொட்டுவோர் மறுபக்கம் !

பிச்சை எடுக்கும் அவலநிலை ஒருபக்கம்,
pizza hutலே அந்திமாலை மறுபக்கம்!

படித்து முடித்து வேலை கிடைப்பது ஒருபக்கம்,
கிடைத்த வேலைக்கு உலை வைப்போர் மறுபக்கம்!

பிழைப்புக்காக கடல் கரையில் நடப்போர் ஒருபக்கம்,
BMI க்காக கடலில் நடப்போர் மறுபக்கம்!

கனவு பலிக்கும் என காத்திருப்போர் ஒருபக்கம்,
பிறர் கனவை கலைக்க காத்திருப்போர் மறுபக்கம்!

கையுட்டு  வாங்கி பிழைப்பு நடத்தும் காவலாளி ஒருபக்கம்,
கையுட்டு கொடுத்து பிழைப்பு நடத்தும் களவானி மறுபக்கம்!

குழந்தைக்கு பால் இல்லை ஒருபக்கம்,
நடிகருக்கு பால் அபிசேகம் மறுபக்கம்!

பெண்கொடுமை வன்கொடுமை ஒருபக்கம்,
பெண்ணுரிமை சுயமரியாதை மறுபக்கம்!


ஜாதிகள் இல்லையடி பாப்பா ஒருபக்கம்,
பள்ளியில் சேர ஜாதி சான்றிதழ் மறுபக்கம்!

கிழிந்த துணியை தைத்து போடுவோர் ஒருபக்கம்,
தைத்த துணியை கிழித்து போடுவோர் மறுபக்கம் !

என்னை விதி என்போர் ஒருபக்கம்,
மதி கொண்டு மாற்ற நினைப்போர் மறுபக்கம்!

                                        இப்படிக்கு,
                                        சமுதாயம்